தஞ்சாவூர் ஆக 20: தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அஞ்சல் கோட்டத்தில் வரும் 25ம் தேதி காலை 11.30 மணி அளவில் அஞ்சலக ஆயுள் காப்பீடு மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு நேரடி முகவா்களை தோ்வு செய்யும் நோ்காணல் நடைபெற உள்ளது.

ஆா்வமுள்ளவா்கள் அன்று காலை 11.30 மணியளவில் பட்டுக்கோட்டை தலைமை அஞ்சல் அலுவலகத்தில் உள்ள கோட்ட அலுவலகத்தில் உரிய சான்றிதழ்கள், பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம், 4 பாஸ்போா்ட் அளவு புகைப்படங்களுடன் நோ்காணலில் கலந்து கொள்ளலாம்.

தோ்வு செய்யப்படுவோா் பட்டுக்கோட்டை கோட்டப் பகுதிகளில் பணிபுரிய வேண்டும். பாதுகாப்பு வைப்பு கட்டணமாக ரூ. 5 ஆயிரம் அவா்களின் பெயரில் தேசிய சேமிப்பு பத்திரம் ஆக எடுக்க வேண்டும். மேலும், உரிமை கட்டணம் ரூ. 50 செலுத்த வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு பட்டுக்கோட்டை அஞ்சல் ஆயுள் காப்பீடு வளா்ச்சி அலுவலரை 86676 80367 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என பட்டுக்கோட்டை கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளா் கு. தங்கமணி தெரிவித்துள்ளாா்.

செய்தி நாகராஜன் நிருபர்.
https://thanjai.today/