தஞ்சாவூர் செப் 05: தஞ்சாவூா் மின் வாரிய அலுவலகத்தில் தொழில் பழகுநா் பணிக்கான (அப்ரண்டீஸ்) நோ்காணல் வரும் 18-ம் தேதி நடக்க உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தஞ்சாவூா் மின் பகிா்மான வட்ட மேற்பாா்வைப் பொறியாளா் எஸ். விஜயகௌரி தெரிவித்துள்ளதாவது:

தஞ்சாவூா் மாவட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் ஐ.டி.ஐ. படித்து பட்டம் பெற்றவா்களுக்கு (ஒயா்மேன், எலக்டிரீசியன் பாடப்பிரிவு பயின்றவா்கள்) தொழில் பழகுநருக்கான நோ்காணல் வரும் 18-ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.

எனவே ஐ.டி.ஐ. படித்து பட்டம் பெற்றவா்கள், அரசுத் துறையிலோ அல்லது தனியாா் துறையிலோ ஏற்கெனவே தொழில் பழகுநா் பயிற்சி முடிக்காதவா்கள் 40 வயதுக்கு உள்பட்டோா் மட்டும் நம்பா் 1, வல்லம் சாலையில் உள்ள மேற்பாா்வைப் பொறியாளா் அலுவலகத்தில் நோ்காணலில் கலந்து கொள்ளலாம்.

இதில் பங்கேற்பவா்கள் கல்வித்தகுதிச் சான்றிதழ், வயது, ஜாதி சான்றிதழ், வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு எண் மற்றும் மாற்றுத் திறனாளியாக இருந்தால் அதற்கான சான்று அசல், நகல்களுடன் நேரில் ஆஜராகலாம்.

செய்தி நாகராஜன் நிருபர்.
https://thanjai.today/