தஞ்சாவூர் மார்ச்:9 – தஞ்சாவூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தஞ்சை மாநகராட்சியின் சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் பழமையான பாலங்கள் இடிக்கும் பணி தீவிரம் போக்குவரத்து மாற்றம்.
தஞ்சை மாநகராட்சியில் இத்திட்டத்தின் கீழ் ஆயிரம் கோடி ரூபாயில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு கட்டமாக தஞ்சை நகர பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு சாலை விரிவாக்கம் பணி நடைபெற்று வருகிறது.

இதற்காக தஞ்சையின் முக்கிய வீதியான காந்திஜி சாலையில் 1934ல் ஆங்கிலேயர் காலத்தில் கல்லணை கால்வாய் அமைக்கும் போது கட்டப்பட்ட இர்வின் பிரிட்ஜ் என அழைக்கக் கூடிய ஆற்றுபாலம் இடிக்கப்பட்டு நெடுஞ்சாலைத்துறை சார்பில் மாநில நெடுஞ்சாலை துறை மூலம் 3 கோடி ரூபாயில் புதிய பாலம் கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டு பாலம் இடிக்கக் கூடிய பணி நடைபெற்று வருகிறது. இதற்காக தஞ்சை நகர பகுதியில் உள்ள முக்கிய சாலைகள் ஆன அண்ணா சாலை காந்தி சாலை உள்ளிட்ட சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் தஞ்சையின் நகரப் பகுதியில் மற்றொரு விதமான தந்தை பகுதியில் உள்ள குறுகிய காலமான வடவாற்று பாலம் அமைக்கும் இடிக்கப்பட்டு அதற்கு பதிலாக திரை சார்பில் 3 கோடி ரூபாயில் புதிய பாலம் கட்டுவதற்கான பணி நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பயன்படுத்தக்கூடிய போக்குவரத்து வடக்குவாசல் சிரேசரித்திரம் சாலை வழியாகவும் மாற்றப்பட்டுள்ளது.

க.சசிகுமார் நிருபர்.
https://thanjai.today/