தஞ்சாவூர் ஆக 09: கொரோனா பரவலை தடுக்கும் முதன்மையான வழிகள் முகக்கவசம் மற்றும் பொதுமான இடைவெளியாகும். ஆனால் தமிழ்நாட்டில் பெரும்பாலும் இந்த இரண்டையும் பற்றி பெரிதாக பொதுமக்கள் கவலைப்படுவதில்லை.
அண்மையில் நமது சுகாதாரச் செயலர் பொதுமக்கள் பெரும்பாலும் முகக்கவசம் அணிவதில்லை, தஞ்சை மாவட்டத்தில் கொரோனா குறையாததற்கு முதன்மையான காரணம் அங்கு அதிகமாக முகக்கவசம் அணியாதது தான் என்று வெளிப்படையாக கூறினார்.

இதனையடுத்து மாவட்ட ஆட்சித்தலைவர் பல பொது இடங்கள் மற்றும் கடைகளுக்குச் சென்று அவர்களுக்கு அறிவுறுத்தல் மற்றும் சில இடங்களுக்கு அபதாரமும் விதித்ததை அறிவோம்.
இப்போது முன்றாவது அலை பரவலை தொடங்கியுள்ளது. அதனை தடுக்க இயலாது என்று பலரும் கூறுவதால் அதனை தடுக்கும் முனைப்புடன் இன்று தஞ்சையில் பல இடங்களில், ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் நேரடியாக ஆய்வில் இறங்கி முகக்கவசம் அணியாதவர்களை கண்டறிந்து அவர்களுக்கு அபதாரமும் விதித்தார்கள்.
செய்தி செந்தில்குமார் நிருபர்.
https://thanjai.today/