தஞ்சாவூர் செப் :29- தஞ்சை மாநகரில் சாலையில் சேரும் மண் நீக்கும் நவீன இயந்திரம் பொருத்திய வாகனம் மூலம் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த எந்திரத்தில் ஒரு டன் மண் சேமிப்புத் தொட்டியும் உள்ளது வெளிநாடுகளில் இது போன்ற வாகனங்களை கொண்டு தான் சாலையில் சேரும் மண்ணை அகற்றுகின்றனர்.

தஞ்சை மாநகர் பகுதியில் மாநில நெடுஞ்சாலை மாநகராட்சிக்கு சொந்தமான சாலைகள் உள்ளன. இதில் மாநில நெடுஞ்சாலையில் பல பகுதிகளில் சாலையில் மைய தடுப்பு அமைக்கப்பட்டு அதில் மின் விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளன. இந்த சாலையில் மைய தடுப்பு பகுதியின் ஓரங்களில் அதிக அளவில் காணப்படுகிறது இந்த மண் காற்று அடிக்கும்போது பறந்து சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் கண்களில் படுகிறது.

சில நேரங்களில் மண் படிந்துள்ள பகுதிக்குச் செல்லும் போது வாகனங்கள் சறுக்கி விடுகிறது. இதனால் விபத்துகளும் ஏற்படுகின்றன. இதனை தவிர்க்கும் வகையில் சாலையில் மைய தடுப்பு பகுதி மற்றும் சாலையில் அதிக அளவு படிந்துள்ள மண்ணை அகற்றும் வகையில் நவீன இயந்திரம் பொருத்திய வாகனம் வரவழைக்கப்பட்டு உள்ளது.

இந்த வாகனம் மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும். இதில் பொருத்தப்பட்டுள்ள மண் அள்ளும் எந்திரத்தை இயக்கத் தொடங்கினால் ஐந்து முதல் ஏழு கிலோ மீட்டர் தூரம் வரைதான் செல்லும். இந்த வாகனத்தின் முன்பக்க மற்றும் பின்பக்க டயர் களுக்கு மையப்பகுதியில் இரண்டு சுழலும் துடைப்பான் பொருத்தப்பட்டுள்ளது இந்த துடைப்பான் மூலம் சுத்தப்படுத்தப்படுகிறது இந்த துடைப்பான் மூலம் சுத்தப்படுத்துவது உடன் சாலை ஓரங்களில் உள்ள மண் உறிஞ்சப்பட்டு அங்கு உள்ள தொட்டியில் சேரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த தொட்டி ஒரு டன் மண் சேகரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது தஞ்சை மாநகரில் உள்ள பல்வேறு நெடுஞ்சாலைகளில் இந்த வாகனம் மூலம் சேரும் மண் அகற்றப்பட்டது நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் முன்னிலையில் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

செய்தி க.சசிகுமார் நிருபர்.
https://thanjai.today/