தஞ்சை சூலை 10: தஞ்சை பயணிகள் ரயில்களை உடனடியாக இயக்குவது குறித்து அறிவிக்க வேண்டும் என தெற்கு ரயில்வே நிா்வாகத்துக்கு தஞ்சாவூா் மாவட்ட ரயில் உபயோகிப்பாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தஞ்சாவூரில் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கொரோனா பொதுமுடக்கத் தளா்வுகள் அறிவிக்கப்பட்டு, பொது போக்குவரத்து இயக்கப்படுகின்றன. கடந்த ஓராண்டாக பயணிகள் ரயில்கள் முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் அலுவலகத்துக்குச் செல்வோா், பொதுமக்கள் நாள்தோறும் அவதிப்பட்டு வருகின்றனா். எனவே நிறுத்தப்பட்டுள்ள பயணிகள் ரயில்களை உடனடியாக இயக்க வேண்டும்.

நோயாளிகளையும், முதியோா்களையும் வழியனுப்ப வரும் பயணிகள் நடைமேடை சீட்டு விலை உயா்வால் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே, நடைமேடை சீட்டுக் கட்டணத்தை மீண்டும் பழைய நிலைக்கே கொண்டு வந்து விலையைக் குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தலைவா் அய்யனாபுரம் நடராஜன் தலைமை வகித்தார். கூட்டத்தில் செயலா் ஜீவக்குமாா், நிா்வாகிகள் கண்ணன், ரெங்கராஜ், செல்ல. கலைவாணன், திருமேனி, ரெங்கநாதன், பாலு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

செய்தி நாகராஜன் நிருபர்.
https://thanjai.today/