தஞ்சாவூர் ஆக 23: தஞ்சை மேரிஸ்கார்னர் நாஞ்சிக்கோட்டை சாலை பிரியும் பகுதியில் பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட குழி மூடப்படாமல் இருப்பதால் விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. எனவே இந்த குழியை உடன் மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தஞ்சை மேரிஸ் கார்னர் அருகே நான்கு பிரதான சாலை பிரிந்து செல்கிறது. இந்த சாலை வழியாக பழைய பஸ் நிலையத்தில் இருந்து கறம்பக்குடி, ஒரத்தநாடு, திருவோணம், பட்டுக்கோட்டை, குருங்குளம், மருங்குளம், அதங்கரைபட்டி, வெட்டிக்காடு, செல்லம்பட்டி உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கும் தினமும் 30 க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாஞ்சிக்கோட்டை சாலை பிரியுமிடத்தில் பாதாள சாக்கடை சீரமைப்புக்காக குழி தோண்டப்பட்டது. ஆனால் இந்த குழியை மூடாமல் அப்படியே போட்டு விட்டனர்.

இதனால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் குழியில் விழுந்து காயம் அடைந்து வருகின்றனர், எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாதாள சாக்கடை சீரமைப்புக்காக தோண்டப்பட்ட குழியை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

செய்தி நாகராஜன் நிருபர்.
https://thanjai.today/