தஞ்சை ஜனவரி 10 தஞ்சை அரசு தொழிற்பயிற்சி நிலைய இயக்குனர் அலுவலகம் சார்பில் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தஞ்சை திருவையாறு ஒரத்தநாடு அரசு தொழில்நுட்ப பயிற்சி நிலையங்களில் காலியிடங்கள் பல்வேறு தொழில் பிரிவுகளில் உள்ள அதனை நேரடியாக சேர்க்கை மூலமாக வருகிற 16-ஆம் தேதி சனிக்கிழமை வரை பயிற்சியாளர்கள் சேர்க்கப்பட உள்ளனர்.

10 மற்றும் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 14 வயது நிரம்பிய ஆண் பெண் அனைவரும் பயிற்சி செய்யலாம் மகளிருக்கு கணினி பயிற்சி மற்றும் டிப்ளமோ மெக்கானிக்கல் தொழில்நுட்ப பிரிவுகள் உள்ளன அவளுக்கு வயது வரம்பு இல்லை இதில் சேர எட்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் இரண்டும் அல்லது ஏதாவது ஒன்று கொண்டுவரவேண்டும் ஜாதி சான்றிதழ் மாற்றுச் சான்றிதழ் ஆதார் அட்டை நகல் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ  வேண்டும்

எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும் சேரலாம், இதில் பயிற்சி பெறுபவர்கள் அரசு போக்குவரத்து கழகம் ரயில்வே போன்ற துறைகளில், தனியார் வேலைவாய்ப்பில் சேரலாம் ,அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவ மாணவிகளுக்கு அரசால் வழங்கப்படும் விலையில்லா பொருள்கள் மாதாந்திர உதவித்தொகை வழங்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.

க.சசிகுமார், நிருபர்,
தஞ்சாவூர்