தஞ்சை மார்ச் 31 தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே வாக்கு சேகரிக்க சென்ற சுயேச்சை வேட்பாளரை ஒரு பிரிவினர் தடுத்ததால் சுயேச்சை வேட்பாளரின் ஆதரவாளர்கள் திடீரென சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர், ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக கரம்பயம் பகுதியை சேர்ந்த மூக்கையன் என்பவர் போட்டியிடுகிறார் இவர் தனது ஆதரவாளர்களுடன் ஒரத்தநாடு அருகே உள்ள பொட்டலங்குடிக்காட்டில் வாக்கு சேகரிக்க சென்றுள்ளனர்.

ஒரு பிரிவினர் இந்தப் பகுதியில் வாக்கு சேகரிக்க உள்ளே வரக் கூடாது என்று தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது இதில் ஆத்திரமடைந்த இசை வேட்பாளர் மூக்கையன் மற்றும் தனது ஆதரவாளர்களுடன் ஒரத்தநாடு மன்னார்குடி சாலையில் அமர்ந்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர் இதுகுறித்து தகவல் அறிந்த ஒரத்தநாடு டிஎஸ்பி பழனி தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர் சாலை மறியலில் ஈடுபட்ட சுயேச்சை வேட்பாளர், ஆதரவாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

வேட்பாளர் தேர்தல் பிரச்சாரத்திற்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என கோரிக்கை வைத்ததால் தொடர்ந்து 2 மணி நேரம் சாலை மறியலில் ஈடுபட்டனர் இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது, போட்டோ எடுக்க வந்த பத்திரிகை நிருபரிடம் ஐடி கார்டு வாங்கிக் கொண்டு ஒரத்தநாடு டிஎஸ்பி பழனி போட்டோ எடுக்க வைத்தார், இதனால் சாலையில் மறியலில் ஈடுபட்ட சுயேச்சை வேட்பாளர் ஆதரவாளர்கள் பத்திரிக்கை நிருபர்களுக்கே இந்த நிலைமை என்றால் எங்களை நினைத்துப்பாருங்கள், ஏழை எளிய, சாதாரண மக்கள், நிலை என்ன? நினைத்துப்பாருங்கள் என்று கோஷமிட்டனர் இதனால் சம்பவ இடத்தில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

செய்தி க,சசிகுமார் நிருபர்,
தஞ்சை.