தஞ்சை ஏப்ரல் 26: தஞ்சை மாவட்டத்தில் முழு ஊரடங்கு யொட்டி நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் ரூபாய் 8.1/4. கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் மாநிலம் முழுவதும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது.

அந்த வகையில் மாநிலம் முழுவதும் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேர ஊரடங்கு அமல் படுத்தியுள்ளது, அந்த வகையில் நேற்று முழு ஊரடங்கு என்பதால் தஞ்சை மாவட்டத்தில் அனைத்து மதுபான கடைகளும் மற்றும் அனைத்து வணிக நிறுவனங்களும் அடைக்கப்பட்டிருந்தன அதேபோல் டாஸ்மாக் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.

மது பிரியர்கள் முதல் நாளே அதாவது சனிக்கிழமை அன்று தங்களுக்கு தேவையான மதுபாட்டில்களை வாங்கி சென்று இருப்பு வைத்துக் கொண்டனர், இதனால் நேற்று முன்தினம் சனி அன்று மதுபான கடைகளில் வழக்கத்தை விட மது பிரியர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது விற்பனையும் படுஜோராக நடைபெற்றது.

தஞ்சை மாவட்டத்தில் 160 டாஸ்மாக் கடைகள் உள்ளன வழக்கமாக பண்டிகை காலங்களில் விற்பனை அதிகமாக இருக்கும், ஆனால் கடந்த சில மாதங்களாகவே ஒருநாள் டாஸ்மாக் கடை மூடப்படுகிறது என்றாலே அதற்கு முதல் நாள் மது விற்பனை பண்டிகை நாட்களை விட அதிக அளவில் நடைபெறுகிறது.

வழக்கமான நாட்களில் தஞ்சை மாவட்டத்தில் ரூபாய் 4 கோடி முதல் ரூபாய் 5 கோடி வரை மது விற்பனை நடைபெறும் நேற்று முழு ஊரடங்கு என்பதால் நேற்று முன்தினம் சனிக்கிழமை அன்று மட்டும் தஞ்சை மாவட்டத்தில் உள்ள 160 டாஸ்மார்க் கடைகள் மூலம் ரூபாய் 8 கோடியே 22 லட்சத்து 59 ஆயிரத்து 850 மதிப்பில் மது விற்பனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

செய்தி க.சசிகுமார் நிருபர்.
தஞ்சை.