தஞ்சாவூர் செப் 05 சென்னை: தமிழகத்தில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை தீவிரமடைந்துள்ளதால் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. இது விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தொடர் மழையால் கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து வினாடிக்கு 11 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் தமிழ்நாட்டிலும் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிளில் பரவலாக மழை பொழிந்து வருவதால், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது .
வினாடிக்கு 22 ஆயிரம் கனஅடி தண்ணீர் வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதனிடையே, அணையிலிருந்து குறுவை சாகுபடிக்காக 5 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது.
கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 650 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து வினாடிக்கு 19,000 கன அடியிலிருந்து மேலும் அதிகரித்து, வினாடிக்கு 23,000 கன அடியாக உயர்ந்துள்ளது. அதேவேளையில், தொடர் மழை காரணமாக ஒகேனக்கல் அருவிகளில் தண்ணீர் பெருமளவில் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. இதனால் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
செய்தி நாகராஜன் நிருபர்.
http://thanjai.today/