அதிராம்பட்டினம்: மீன்பிடி தடைக்காலம் அமுலில் உள்ளதால் மீன்கள் விற்பனை குறைந்துள்ளது. இதற்கிடையில் அதிராம்பட்டினத்தில் கருவாடு விற்பனை கிடுகிடுவென அதிகரித்துள்ளது.
ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 15-ந்தேதி முதல் 2 மாதத்திற்கு மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்படும். தற்போது மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளது. இதனையடுத்து விசைப்படகுகள் ஆழ்கடலுக்கு செல்லாத காரணத்தால் அதிராம்பட்டினம் மார்க்கெட் பகுதியில் உயர் ரக மீன்களான வஞ்சிரம், காலா, வவ்வா, கொடுவா, சீலா உள்ளிட்ட கடல் வாழ் உயிரினங்கள் அதிகமாக கிடைக்காது.
இந்நிலையில் அதிராம்பட்டினம் பகுதியில் நாட்டுப்படகுகள் மூலம் மீன்பிடிப்பதால் குறைந்த அளவிலான மீன்கள் மட்டுமே கிடைக்கிறது. இதனால் மார்க்கெட்டில் தற்போது மீன் விலை அதிகமாக உள்ளது. இதையடுத்து கருவாடு விற்பனை அதிகரித்துள்ளது. சில தினங்களுக்கு முன்பு பெய்த மழையால் விற்பனைக்கு தயார் நிலையில் இருந்த கருவாடுகள் மழைநீரில் நனைந்து அழுகியது.
தற்போது மழையில் நனைந்த கருவாடுகளை தொழிலாளர்கள் வெயிலில் காயவைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் காளை, தோகை, கத்தாலே, பன்னா, வாவல், திருக்கை ஆகிய கருவாடுகளை கடைகள் மற்றும் சந்தைகளில் தரம் பிரித்து விற்பனை செய்து வருகின்றனர்.
செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்