தஞ்சை ஏப். 27: டெல்டாவில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 2 பெண்கள் உட்பட 7 பேர் பலியானார்கள் 552 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது, தஞ்சை மாவட்டத்தில் 300 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது 172 பேர் குணமடைந்து வீடு திரும்பினார், இதன் மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 24 ஆயிரத்து 368 ஆக உயர்ந்தது, தற்போது இரண்டாயிரத்தி 68 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 57 74 65 வயதான ஆண்கள் மற்றும் 81 வயது பெண் உட்பட நான்கு பேர் பலியானார்கள் மாவட்டத்தில் இதுவரை 296 பேர் பலியாகியுள்ளனர், திருவாரூர் மாவட்டத்தில் நேற்று 25 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது, 137 பேர் குணமடைந்து வீடு திரும்பினார் இதன் மூலம் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 14 ஆயிரத்து 534 ஆக உயர்ந்தது, கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 81, 25 வயது ஆண்கள் பலியானர்கள் இதன் மூலம் மாவட்டத்தில் இதுவரை 170 பேர் பலியாகியுள்ளனர்.

தற்போது 922 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள் நாகை மாவட்டத்தில் 17 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது 270 பேர் குணமடைந்து வீடு திரும்பினார், இதன்மூலம் மாவட்டத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2 ஆயிரத்து 354 இருந்தது தற்போது 1206 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள், இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 68 வயது பெண் பலியானார், இதன் மூலம் மாவட்டத்தில் இதுவரை 167 பேர் பலியாகியுள்ளனர், தஞ்சை டெல்டாவில் ஒரே நாளில் 2 பெண்கள் உள்பட 7 பேர் பலியானார்கள் மேலும் ஒரே நாளில் 552 பேருக்கு ‍தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 573 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்.

செய்தி க.சசிகுமார் நிருபர்
தஞ்சை.