தஞ்சாவூர் செப். 22- தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் சார்பில் புதுப்பிக்கப்பட்ட சித்தமருத்துவத்தின் புற நோயாளிகள் பிரிவு துவங்கப்பட்டது.

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலையில் மூலிகைப் பண்ணை வளாகத்தில் தமிழ்ப் பல்கலைக்கழகம் சார்பில் புதுப்பிக்கப்பட்ட சித்தமருத்துவ புறநோயாளிகள் பிரிவு பல்கலைக்கழக துணைவேந்தர் பாலசுப்பிரமணியன் திறந்துவைத்தார்.

பின்னர் நிருபர்களிடம் துணைவேந்தர் பாலசுப்பிரமணியன் கூறியதாவது, தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம் சார்பில் அரண்மனை வளாகத்தில் சித்த மருத்துவ பிரிவு செயல்பட்டு வந்தது. கொரோனா காலத்தில் செயல்படாமல் இருந்த இந்த பிரிவை மருத்துவ கல்லூரி சாலையில் தமிழ் பல்கலைக் கழகத்துக்கு சொந்தமான மூலிகைப் பண்ணை அமைந்துள்ள வளாகத்தில் புதுப்பிக்கப்பட்ட சித்தமருத்துவ புறநோயாளிகள் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

சித்த மருத்துவத்தில் தமிழ் ஆங்கில அகராதியை உருவாக்கிய தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த தா.வி. சாம்பசிவம் அவர்களின் பங்களிப்பைப் போற்றும் வகையில் இந்த சித்த மருத்துவப் பிரிவுக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இங்கு திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 10 மணி முதல் 12 மணி வரை நோயாளிகளுக்கு இலவசமாக மருத்துவம் பார்க்கப்படும். இதற்காக மூன்று மருத்துவர்கள் பணியில் உள்ளனர். மருந்துகளுக்கு மட்டும் ரூபாய் 10 வசூலிக்கப்பட உள்ளது.

பொதுமக்கள் வருகையை கொடுத்து சனி ஞாயிற்றுக்கிழமைகளிலும் சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்யப்படும் என்றார் நிகழ்வில் பதிவாளர் கோவை மணி ஆட்சிக்குழு உறுப்பினர்கள் காமராஜ், நீலகண்டன், சின்னப்பன், மருத்துவர்கள் மாண்டேலா, பாரத ஜோதி, மற்றும் பேராசிரியர்கள் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

செய்தி க.சசிகுமார் நிருபர்
https://thanjai.today/