தஞ்சாவூர் பிப்.15,கல்லணையில் இருந்து பிரிந்து செல்லும் கல்லணை கால்வாய் பாசனம் மூலம் தஞ்சை மட்டுமின்றி புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகளும் பயனடைந்து வருகின்றனர் இந்த கல்லணை கால்வாய் அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று சுமார் ரூபாய் 2,639 கோடியே 15 லட்சம் மதிப்பில் கல்லணைக் கால்வாய் விரிவாக்கம் புதுப்பித்தல் மற்றும் புனரமைத்தல் திட்டத்தினை சென்னையை நேரு உள் விளையாட்டு அரங்கில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய தஞ்சை புதுக்கோட்டை மாவட்டங்களில் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர் மேலும் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது எட்டி தஞ்சையை அடுத்த சூரக்கோட்டை ஊராட்சியில் கல்லணை கால்வாயில் இருந்து கல்யாண ஓடித்திரியும் தலைப்பு பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் கலந்துகொண்டு விவசாயிகளுக்கு இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் பட்டுக்கோட்டை மா கோவிந்தராஜ், பேராவூரணி புதுக்கோட்டை மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன் முன்னாள் எம்எல்ஏ திருஞானசம்பந்தம் நிலவள வங்கி தலைவர் துரை வீரணன்  கல்லணை கால்வாய் கோட்ட செயற்பொறியாளர் முருகேசன் உதவி செயற்பொறியாளர்கள் சண்முகவேல் உதவி பொறியாளர்கள் அன்புச்செல்வன் துஷ்யந்தன் மற்றும் விவசாயிகள் பொதுப்பணித் துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்,

பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறும்போது இந்த திட்டமானது கல்லணையிலிருந்து கல்லணை கால்வாயில் 4200 கன அடி தண்ணீர் வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த திட்டத்தை செயல் படுத்துவதன் மூலம் தஞ்சை புதுக்கோட்டை மாவட்டங்களில் 2 லட்சத்து 27 ஆயிரத்து 472 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் மேலும் 694 ஏரிகள் மூலமாக 81 ஆயிரத்து 942 இயக்கர் மறைமுக பாசன வசதி பெறும் மொத்தம் ஆயிரத்து 232 கிலோ மீட்டருக்கு நீளத்திற்கு பணிகள் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது இதில் புனரமைக்கும் மற்றும் நவீனப்படுத்த திட்டம் மூலம் தற்போதைய 45 சதவீத நீர் வழங்கும் திறனில் இருந்து 61 சதவீதமாக உயர்த்தப்பட உள்ளது இந்த திட்டம் 3 ஆண்டுகளில் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என்றனர்.

செய்தி க.சசிகுமார் நிருபர்,
தஞ்சை.