தஞ்சாவூர், மார்ச்.5 – தஞ்சை மாநகராட்சியில் 51 புதிய கவுன்சிலர்கள் பதவி ஏற்று கொண்டனர். இவர்களுக்கு மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை, கும்பகோணம் ஆகிய 2 மாநகராட்சிகள், பட்டுக் கோட்டை. அதிராம்பட்டினம் ஆகிய 2 நகராட்சிகள், 20 பேரூராட்சிகளுக்கு கடந்த மாதம் 19-ந்தேதி தேர்தல் நடந் தது. இவற்றில் மொத்தம் 459 வார்டு கவுன்சிலர் பதவிகள் உள்ளன. இதில், பெருமகளூர் பேரூராட்சியில் 2 வார்டு கவுன்சிலர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மேலும், அய்யம்பேட்டை பேரூராட்சியில் 9-வது வார்டில் தி.மு.க. வேட்பாளர் அனுசுயா மாரடைப்பால் மரணம் அடைந்ததால் அந்த வார்டின் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் 456 வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டு, புதிய கவுன்சிலர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் தஞ்சை மாநகராட்சியில் 51 வார்டுகள் உள்ளன. இவற்றில் தி.மு.க. 34 இடங்களிலும், அதன் கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட ம.தி.மு.க. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலா 1 இடத்திலும் வெற்றி பெற்றன. காங்கிரஸ் கட்சி 2 இடத்தி லும், விடுதலை சிறுத்தைகள் கட்சி 1 இடத்திலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி : இடத்திலும் என மொத்தம் 40 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அ.தி.மு.க. 7 இடங்களிலும், பா.ஜ.க.,அ.ம.மு.க. தலா 1 இடத்திலும், சுயேச்சைகள் 2 இடத்திலும் வெற்றி பெற்று உள்ளது.

வெற்றி பெற்ற புதிய கவுன் சிலர்கள் பதவி ஏற்பு விழா எளிமையான முறையில் தஞ்சை மாநகராட்சி புதிய கூட்ட அரங்கில் நடந்தது. விழாவுக்கு மாநகராட்சி ஆணையரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான சரவணகுமார் முன்னிலை வகித்தார். கண்காணிப்பாளர் கிளமெண்ட் அந்தோணிராஜ் வரவேற்றார். தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா தொடங்கியது. ஒவ்வொரு வார்டு கவுன்சிலராக மேடைக்கு அழைக்கப்பட்டனர். புதிய கவுன்சிலர்களுக்கு மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

புதிய கவுன்சிலர்கள் பெரும்பாலானோர் இறைவன், ஆண்டன் மீது உறுதியளித்து பதவி ஏற்றனர். சிலர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மீதும், மறைந்த தி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதி மீதும் உறுதியளித்து பதவி ஏற்றனர்.

கூட்ட அரங்கிற்குள் கவுன்சிலர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். மற்றவர்கள் கூட்ட அரங்கத்திற்கு வெளியே அமர வைக்கப் பட்டு இருந்தனர். இவர்கள் பதவி ஏற்பு விழாவை கண்டுகளிக்கும் வகையில் அகன்ற திரையில் பதவி ஏற்பு நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்டது. பதவி ஏற்று கொண்டு கூட்ட அரங்கை விட்டு வெளியே வந்த புதிய கவுசின்லர்கள் உறவினர்கள், நண்பர்கள், கட்சி தொண்டர்கள் பொன்னாடை போர்த்தியும், ஆளுயர மாலை அணிவித்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
பதவி ஏற்பு விழாவை யொட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு கபிலன் மேற்பார்வையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

தஞ்சை மாநகராட்சி 21-வது வார்டில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சந்திரலேகா பதவி ஏற்பு விழாவில் பங் கேற்பதற்காக மாநகராட்சி கூட்ட அரங்கிற்கு வந்தார். அப்போது அவரிடம் மாநகராட்சி ஊழியர்கள் கையெழுத்து பெற்றனர். பின்னர் அவர் இருக்கையில் அமருவதற்காக நடந்து சென்ற போது திடீரென கால் தடுமாறி கீழே விழுந்துவிட்டார். இதில் அவருக்கு கால்முட்டியில் லேசாக அடி விழுந்ததால் நடப்பதற்கு கொஞ்சம் சிரமப்பட்டார்.


அவர் பதவி ஏற்று கொள்ள மேடையை நோக்கி நடந்து சென்றபோது அவர் சிரமப்பட்டதை அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா வேகமாக வந்து, அவரது கைகளை பிடித்து கொண்டு மேடைக்கு அழைத்து சென்றார். அங்கே அவரை நிற்க வைக்காமல் நாற்காலியில் அமர வைக்கப்பட்டார். பின்னர் அவர் பதவி ஏற்றபோது தனது பெயரை கூறியவுடன் மற்ற எல்லா உறுதிமொழியையும் ஆணையர் சரவணகுமாரே வாசித்து பதவி ஏற்று கொள்ள உறுதுணையாக இருந்தார்.

கவுன்சிலர்களின் விருப்பத்திற்கு ஏற்ப புத்தகங்கள் வழங்கி அசத்திய ஆணையர்
தஞ்சை மாநகராட்சியில் பதவி ஏற்று கொண்ட ‘புதிய கவுன்சிலர்களுக்கு மாநகராட்சி ஆணையர் சரவணகுபார் புத்தகங்களை நினைவு பரிசாக வழங்கினார். தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு / முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய உங்களில் ஒருவன் என்ற பத்தகங்கள் வழங்கப்பட்ட இதேபோல் அ.தி.மு.கவை சேர்ந்த மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு வாத்யார், புகழ் மணச்செம்மல் எம்.ஜி.ஆர், ஜெ.ஜெயலலிதா என்னும் நான், வாழ் வியல் சிந்தனை ஆகிய புத்தகங்கள் வழங்கப்பட்டன.

அ.ம.மு.க.வை சேர்ந்த மாநகராட்சி கவுன்சிலருக்கு எட்டாவது வள்ளல் எம்.ஜி.ஆர். என்ற புத்தகமும், பா.ஜ.க.வை சேர்ந்த மாநகராட்சி கவுன்சிலருக்கு ஊரெல்லாம் சிவமணம் என்ற புத்தகமும் நினைவு பரிசாக வழங்கப்பட்டது. ஒவ்வொரு கட்சியை சேர்ந்த கவுன்சிலர்களுக்கும் அவர்கள் சார்ந்த கட்சிகளின் தொடர்புடைய புத்தகங்களை ஆணையர் வழங்கினார்.

க.சசிகுமார் நிருபர்.
https://thanjai.today/