தஞ்சை சூன் 13: தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் வட்டாரத்தில் 527 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
தஞ்சை மாவட்டம் பூதலூர் வட்டாரம் கோவில்பத்து கிராமத்தில் 122 பேருக்கும், கோவிலடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் 105 பேருக்கும், மாரநேரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் 60 பேருக்கும், பாளையப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் 97 பேருக்கும். பாளையப்பட்டி கிராமத்தில் 83 பேருக்கும், பாரத் கேஸ் கம்பெனியில் 120 பேருக்கும் என மொத்தம் 527 பேருக்கு கொரோனா தடுப்பு ஊசி போடப்பட்டது.
இதற்கிடையில் பூதலூர் வட்டாரத்தில் 30 பேருக்குக் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. அதில் திருக்காட்டுப்பள்ளியில் 4 பேருக்கும் , பூதலூரில் 4 பேருக்கும், ரெங்கநாதபுரத்தில் 2 பேருக்கும், செங்கிபட்டி , பாளையப்பட்டி, மைக்கேல்பட்டி, தோகூர் ஆகிய பகுதிகளில் தலா ஒருவருக்கும், நவலூரில் 16 பேருக்கும் என மொத்தம் 30 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதே போல் திருவையாறு பேரூராட்சி மற்றும் ஒன்றியப் பகுதிகளில் 11 ஊர்களில் 40 பேருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டு அவர்கள் அனைவரும் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் செம்மங்குடி மடம் கிராமத்தில் ஒரே தெருவில் 9 பேருக்குமேல் தொற்றால் பாதிக்கப்பட்டதால் அந்ததெருவைத் திருவையாறு தாசில்தார் நெடுஞ்செழியன், ஆர். ஐ- கள் சந்துரு, மஞ்சு, சாந்தி மற்றும் விஏஓ, ஊராட்சி செயலர் ஆகியோர் பார்வையிட்டுச் சுத்தம் செய்து கிருமி நாசினி தெளிக்க செய்தனர். மேலும் தெருக்களைக் கம்பு, தகரம் வைத்து அடைத்தனர்.
செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்