தஞ்சாவூர் செப் 03: தஞ்சை மாவட்டம் திருவையாறு கடைவீதிகளில் முகக்கவசம் அணியாத வாகன ஓட்டுநர்கள், வியாபாரிகள், கடைக்காரர்களுக்கு தஞ்சை ஆர்டிஓ தலைமையில் அலுவலர்கள் ரூ. 19 ஆயிரம் அபராதம் விதித்து அதிரடியாக நடவடிக்கை எடுத்தனர்.

தமிழக அரசு கொரோனா தொற்றிலிருந்து மக்கள் காப்பாற்ற பலவித நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பொதுமக்கள் அனைவரும் முககக்வசம் அணிந்து வெளியே செல்லவேண்டும். கடைகளிலும், வியாபாரிகள் முகக்கவசம் அணிந்து வியாபாரம் செய்யவேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் தஞ்சை ஆர்டிஓ வேலுமணி தலைமையில் தாசில்தார் நெடுஞ்செழியன், பேரூராட்சி செயலர் அலுவலர் ராஜா, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஞானமுருகன், மண்டல துணை வட்டாட்சியர் வெங்கட்ராமன், ஆர்ஐ -கள் சாந்தி, மஞ்சு, ராஜேஷ், மற்றும் விஏஓ -கள், கிராம உதவியாளர்கள் திருவையாறு கடைவீதிகளில் முகக்கவசம் அணியாமல் சென்ற பொதுமக்கள், வாகன ஓட்டுநர்கள், கடைகாரர்கள், வியாபாரிகள் ஆகியோருக்கு ரூ. 19 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும் முகக்கவசம் அணிய அறிவுரை வழங்கி சமூக இடைவெளி கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டது.

செய்தி நாகராஜன் நிருபர்.
https://thanjai.today/