தஞ்சை மே 14: தஞ்சையில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளி அங்கிருந்த கொரோனா தடுப்பு மய்யத்திலிருந்து தப்பியோடி உள்ளார்.

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்து உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 36 வயதுள்ளவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அந்த கொரோனா நோயாளி வல்லத்தில் உள்ள குடிசை மாற்று வாரிய கொரோனா சிகிச்சை மையத்தில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

சிகிச்சை பெற்று வந்த நிலையில் அங்கிருந்து அவர் தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து துணை தாசில்தார் மரியஜோசப் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது போன்ற கொரோனா தாக்கப்பட்டவருக்கு பெரிய பாதிப்பினை ஏற்படுத்தாமல் போகலாம், ஆனால் அவருடைய குடும்பத்தில் உள்ள மற்ற உறுப்பினர்களுக்கோ, அல்லது அந்த பகுதியில் வாழும் மற்றவர்களுக்கோ பாதிப்பு ஏற்பட்டு இறப்பு வரை செல்வதற்கு வாய்ப்புள்ளது, எனவே குடும்பத்தினரோ அல்லது அந்தப்பகுதி மக்களோ இது போன்று இடையில் தப்பித்து வருகின்றவர்களை அரசுக்கு ‍தெரிவிப்பதே கொரோனா தொற்றுச் சங்கிலியை உடைப்பதற்கு உதவுவதாகும்.

செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்.