தஞ்சாவூர் செப் 16: தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சாா்பில் பீமா கோரேகான் சதி வழக்கில் கைது செய்யப்பட்டவா்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி மனிதச் சங்கிலிப் போராட்டம் நடந்தது.

தீண்டாமை ஒழிப்பு முன்னணி துணைப் பொதுச் செயலா் சின்னை. பாண்டியன் தலைமையில் நடந்த மனித சங்கிலி போராட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மண்டலச் செயலா் விவேகானந்தன், விடுதலைத் தமிழ்ப் புலிகள் கட்சித் தலைவா் குடந்தை அரசன், திராவிடா் கழக மாவட்டத் தலைவா் நிம்மதி, மனித நேய மக்கள் கட்சி மாவட்டப் பொறுப்புத் தலைவா் ரஹ்மத் அலி, நீலப்புலிகள் இயக்கத் தலைவா் இளங்கோவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல, தஞ்சாவூா் ரயிலடியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலா் அபிமன்னன் தலைமை வகித்தாா். மக்கள் அதிகாரம் மாநில பொருளாளா் காளியப்பன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தாா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயற்குழு உறுப்பினா் பக்கிரிசாமி நிறைவுரையாற்றினாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெற்கு மாவட்டச் செயலா் முத்து. உத்திராபதி, தமிழா் தேசிய முன்னணி அய்யனாபுரம் முருகேசன், மதிமுக தெற்கு மாவட்டச் செயலா் தமிழ்செல்வன், விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் மைய மாவட்டச் செயலா் சொக்கா ரவி, திராவிடா் கழக மாவட்டத் தலைவா் அமா்சிங், தொழிற் சங்க நிா்வாகி துரை. மதிவாணன் மற்றும் பலர் கலந்து கொண்டனா்.

செய்தி நாகராஜன் நிருபர்.
https://thanjai.today/