தஞ்சை மே 14 கொரோனா சிகிச்சை செய்து கொள்ள வாருங்கள் என்று பொதுமக்களை வீடு வீடாக சென்று அதிகாரிகள் அழைத்து வருகின்றனர்.

தஞ்சைப் பகுதியில் கொரோனா பரவல் அதிகரிப்பதை தடுக்கும் வகையில் பரிசோதனை மற்றும் தடுப்பூசி முகாம்கள் அதிக அளவில் நடத்தப்பட்டு வருகிறது. இதில் பரிசோதனை செய்து கொள்ள வருமாறு பொதுமக்களை அதிகாரிகள் வீடு வீடாகச் சென்று அழைத்து வருகின்றனர்.

கொரோனா தொற்று அதிகமுள்ள பகுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் பரிசோதனை முகாம்கள் மற்றும் தடுப்பூசி முகாம்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி தஞ்சையை அடுத்த ராமநாதபுரம் ஊராட்சியில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. தஞ்சையை அடுத்துள்ள மானுப்பட்டி உப்பரிகை தெருவில் உள்ள அங்கன்வாடி பள்ளி கட்டிடத்தில் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது.

டாக்டர் சரண்யா தலைமையில் சுகாதார ஆய்வாளர் பழனிச்சாமி ஆய்வக நுட்பனர் சிவசங்கரி சாந்தி செவிலியர்கள் லதா, கல்பனா, பிரியா ஆகியோர் கலந்துகொண்டு முகாமை நடத்தினர்.

அதிகாரிகள் அந்த பகுதியில் உள்ள வீடுகளுக்கு சென்று அங்குள்ள பொதுமக்களிடம் காய்ச்சல், சளி போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக பரிசோதனை செய்து கொள்ளுமாறு வலியுறுத்தினர். பிறகு தடுப்பூசி போட்டுக் கொள்ளும்படியும் அறிவுறுத்தினர். மேலும் உப்பரிகை தெருவில் இதற்காக சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதில் சென்று தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு பொதுமக்களிடம் அறிவுறுத்தினர்.

செய்தி நாகராஜன் நிருபர்
பூதலூர்