தஞ்சாவூர்,டிச.26- தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் 26-வது ஆண்டு வல்லம் சுந்தர உடையார் நினைவு மாநில அளவிலான ஹாக்கி விளையாட்டு போட்டிகள் நடந்தது. இதில் திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், திண்டுக்கல், மதுரை, அரியலூர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் மன்னார்குடியை சேர்ந்த 15 அணி வீரர்கள் கலந்து கொண்டனர்.

போட்டிகளை தமிழக அரசு கால்நடை ஆராய்ச்சி நிலைய முன்னாள் முதல்வர் பேராசிரியர் புண்ணியமூர்த்தி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கலை பண்பாட்டு துறை ஓய்வுபெற்ற இணை இயக்குனர் குணசேகரன் வீரராகவா மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சாமிக்கண்ணு பாஜக மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் வாளமரக் கோட்டை வி.எஸ். இளங்கோவன் முன்னாள் மாநகராட்சி உறுப்பினர் சதாசிவம் ஹாக்கி பயிற்றுனர்கள் தர்மலிங்கம், அன்பழகன் தொழிலதிபர் காவலர் பிரபாகரன்மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மாலையில் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பாரத் கல்வி குழுமத் தலைவர் புனிதா கணேசன் பரிசுகள் வழங்கினார். விளையாட்டுப் போட்டிக்கான ஏற்பாடுகளை பாரத் கல்லூரி பேராசிரியர் செம்பியன் அவரது சகோதரரும், தொழிலதிபருமான சேரலாதன் மற்றும் சுந்தர் உடையார் குடும்பத்தினர் செய்திருந்தனர்.

க.சசிகுமார் நிருபர்.
https://thanjai.today/