தஞ்சை சூலை:14, தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரூபாய் 150 கோடி மதிப்பில் கட்டப்பட்ட பன்னோக்கு உயர் மருத்துவ சிகிச்சை மையம், 2019ஆம் ஆண்டு ஜனவரி 27 ஆம் தேதி திறக்கப்பட்டது. இதில் இதயம் மூளை நரம்பியல் உட்பட பல்வேறு துறைகளில் அதிநவீன சிகிச்சை சாதனங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் இதயநோய் சிகிச்சை துறையில் முதன்முறையாக அதிநவீன ஆப்டிகல் கோஹரன்ஸ், டோமோ கிராபி என்ற தொழில்நுட்பத்துடன் கூடிய சிகிச்சை 10, நாட்களுக்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்ட தொழில்நுட்பத்தை பயன்படுத்தி திருவோணம் தாலுகா மேல ஊரணிபுரத்தை சேர்ந்த ஓட்டுனர் செல்லையனுக்கு (56) ஆஞ்சியோகிராம் மற்றும் சிகிச்சை ஸ்டென்டிங் அண்மையில் செய்யப்பட்டது.

இதன் மூலம் செல்லையனுக்கு மாரடைப்பு நீக்கப்பட்டு சிகிச்சையும் வெற்றிகரமாக செய்யப்பட்டது, இது குறித்து தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரவிக்குமார் நிருபர்களிடம் கூறுகையில் தமிழக முதல்வரின் வழிகாட்டுதலின்படி ரூபாய் 1.25 கோடி செலவில் அதிநவீன ஓ. சி. டி.,இதய ஆஞ்சியோகிராம் சிகிச்சை கருவி இம்மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் செல்லையனுக்கு மாரடைப்பு நீக்கப்பட்டுள்ளதுடன் அவரது இதயத்தசைகளில் உந்தும் திறன் 34 சதவீதத்திலிருந்து, 54 சதவீதமாக மேம்பட்டுள்ளது. இந்த சிகிச்சையை இதயநோய் துறைத் தலைவர் செந்தில்குமார் தலைமையில் மருத்துவர்கள் குமரன், சீனிவாசன், ராஜசேகர், ஆகியோர் கொண்ட மருத்துவக் குழுவினர் வெற்றிகரமாக செய்து சாதனை படைத்துள்ளனர்.

தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை முதல்முறையாக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் செய்யப்பட்டுள்ளது இதை தனியார் மருத்துவமனையில் செய்திருந்தால் ரூபாய் 2 25 லட்சம் செலவாகி இருக்கும் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை இலவசமாக செய்யப்படும்.

இம்மருத்துவமனையில் கொரோனா காலத்திலும் இதய நோய் சிகிச்சை அளிக்கப்படுகிறது கடந்த 2020ஆம் ஆண்டில் 362 பேருக்கும், 2021 ஆம் ஆண்டில் இதுவரை 219 பேருக்கும், இதய நோய் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது என்றார் அப்போது நிலைய மருத்துவ அலுவலர் செல்வம் உதவி நிலைய மருத்துவ அலுவலர் முகமது இப்ரியாஸ் மற்றும் மருத்துவர்கள் உடனிருந்தனர்.

செய்தி க.சசிகுமார் நிருபர்.
https://thanjai.today/