தஞ்சை சூலை 17 தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் வேலை ஆட்கள் பற்றாக்குறையை குறைக்க வேளாண் இயந்திரங்களை மானியத்தில் வாங்குவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர்தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

விவசாயத்தில் வேலை ஆட்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து குறித்த காலத்தில் பயிர் சாகுபடி செய்திடவும் விவசாயிகளின் நிகர லாபத்தை இயற்கை வேளாண்மை இயந்திர மயமாக்கல் திட்டம் தமிழ்நாடு அரசு வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலமாக பெருமளவு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் நடப்பு 2021 22 நிதியாண்டில் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு தனிப்பட்ட விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாங்கும் வேளாண் இயந்திரங்கள் வாடகைக்கு மையம் ஏற்படுத்தவும் மானியம் வழங்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் சிறு குறு அழுத்தப்பட்ட மற்றும் பெண் விவசாயிகளுக்கு 50 சதவீத மானியமும் இதர விவசாயிகளுக்கு 40 சதவீத மானியம் அல்லது அரசால் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச மானியம் பின்னேற்பு மானியமாக வழங்கப்படுகிறது எந்திரங்கள் வாடகை மய்யம் ரூபாய் 25 லட்சம் மதிப்பில் அமைந்திட ஏதுவாக 40 விழுக்காடு மானிய அடிப்படையில் தனிப்பட்ட உழவர்கள் அல்லது வேளாண் குழுக்களுக்கு அதிகபட்சமாக ரூபாய் 10 லட்சம் மாநிலம் பின்னேற்பு மானியமாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.

ஏற்கனவே இணையதளத்தில் பதிவு செய்துள்ள விவசாயிகள் மற்றும் புதியதாக பதிவு செய்யும் விவசாயிகள் தேவையான வேளாண் இயந்திரம் கருவிகளில் தேர்ந்தெடுக்க வேண்டும் ஒரு நிதியாண்டில் தனக்கு தேவைப்படும் ஏதாவது இரண்டு வேளாண் இயந்திரங்கள் அல்லது கருவிகளை மானிய விலையில் விவசாயிகள் விவசாயிகள் வாங்கிய வேளாண் இயந்திரங்கள் கருவிகள் ஆய்வு செய்யப்படும்.

மேலும் தற்பொழுது சிறப்பு குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் நெல் நடவு இயந்திரம் நெல் அறுவடை இயந்திரம் இசை களை எடுக்கும் இயந்திரம் மற்றும் வைக்கோல் கட்டும் இயந்திரம் வழங்கப்பட உள்ளது இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்கள் விண்ணப்பத்தின் ஏர் உழவன் செயலி பதிவு செய்து தொடர்ந்து ஒன்றிய அரசின் இணையதளம் ஆனா மூலம் தகவல்களை அறிந்துக் கொள்ளலாம்.

செய்தி க.சசிகுமார் நிருபர்.
http://thanjai.today/