காவிரி நீர் பெருக்கெடுத்து ஒடும் காலங்களிலும், தூர் வாராதது நீர் வழி அடைத்துக் கொள்வது என தஞ்சை மாவட்டத்தின் கடைமடையை தண்ணீர் சென்றடைவது என்பது பெரும்பாடு.
வடகிழக்கு பருவ மழை மற்றும் புயல் காரணமாக கடற்கரை மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகின்றது இதனால் சேதுபாவா சத்திரம் போன்ற கடைமடை பகுதிகளிலுள்ள ஏரி மற்றும் குளங்கள் நிரம்பி வருகின்றன.
தொடர்ந்து பெய்யும் மழையால் விளங்குளம், ஊமத்தநாடு, பெருமகளூர், சோலைக்காடு, கொரட்டூர் ஏரிகளும் மேலும் ஏராளமான குளங்களும் நிரம்பி உள்ளது இது நிலத்தடி நீரின் மட்டத்தை அதிகரிக்கவும் மேலும் அப்பகுதிகளின் வேளாண்மைக்கும் உதவியாக அமையும் என்று உழவர்கள் மகிழ்ச்சியுடன் கூறுகின்றனர்.