வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளது, தஞ்சை, நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் அதி கனமழை திங்கட் கிழமையிலிருந்து மூன்று நாட்களுக்கு பெய்யும் என்று வானிலை அறிக்கை கூறியுள்ளது.

அதிகனமழை என்பது 20 சென்டி மீட்டருக்கு மேல் மழைப் பெய்வதாகும், தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை தஞ்சை, நாகை மற்றும் திருவாரூர் ராமநாத புரம் மாவட்டங்களில் 20 சென்டி மீட்டருக்கு மேல் அதிகன மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது .

மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் 12 முதல் 20 சென்டி மீட்டர் வரையிலான கன மழை பெய்யும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது, 2018யில் கஜா புயலின் சீற்றத்தால் இதேப்போன்று தஞ்சை, நாகை திருவாரூர் மாவட்டங்கள் பெருத்த சேதத்தினை சந்தித்தது, அதிலிருந்து மக்கள் மீண்டு வருவதற்கே பல மாதங்கள் எடுத்த நிலையில், மீண்டும் ஒரு அதிகன மழை என்பது மக்கள் இந்த நோய் பெருந்தொற்று காலத்தில் பெரும் அச்சத்துடன் உள்ளனர்