தஞ்சாவூர் நவ 03: டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர், மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என எச்சரித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 26ம் தேதி தொடங்கியது. பொதுவாக வடகிழக்கு பருவமழை வட மாவட்டங்களில்தான் ஆரம்பிக்கும். ஆனால் இந்த ஆண்டு தென் மாவட்டங்களில் ஆரம்பித்தது. அதன்படி இந்த மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது.

இந்த நிலையில் வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகத்தில் அனேக இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப் பெறுவதால் தமிழகத்தில் மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர், மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என எச்சரித்துள்ளது.

நாகராஜன் நிருபர்.
http://thanjai.today/