தஞ்சாவூர் ஆக 19: தஞ்சை மற்றும் சுற்றுப்பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தஞ்சை மாவட்டத்தில் சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக கடலோர மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

தஞ்சை மாவட்டத்தில் நேற்று பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. பிற்பகலில் சற்று வெயிலின் தாக்கம் குறைந்து நிலையில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்தது. சிறிது நேரத்தில் தூறலுடன் மழை பெய்ய தொடங்கியது.

பின்னர் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக தஞ்சையில் குளிர்ச்சியான சூழல் நிலவியது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதேபோல் தஞ்சை சுற்றுப்பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.

செய்தி நாகராஜன் நிருபர்.
https://thanjai.today/