தஞ்சாவூர் டிச.11-தஞ்சை பெரியார் நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் ஆயிரம் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார், தஞ்சாவூர் வல்லத்தில் அமைந்துள்ள பெரியார் மணியம்மை நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா விழாவிற்கு பல்கலைக்கழக வேந்தர் கி வீரமணி தலைமை தாங்கினார்.

துணைவேந்தர் வேலுச்சாமி வரவேற்றார் சிறப்பு விருந்தினராக தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி 21 மாணவர்களுக்கு முனைவர் பட்டமும், 30 பேருக்கு தங்கப்பதக்கமும், 29 பேருக்கு வெள்ளிப்பதக்கமும், 23 பேருக்கு வெண்கலப்பதக்கமும் 584 மாணவர்கள் 416 மாணவிகள் என மொத்தம் 1,000 பேருக்கு பட்டங்களை வழங்கினார்.

நிகழ்ச்சியில் ஒரு இணை வேந்தர் ராஜசேகரன், ஆட்சிமன்றக் குழு உறுப்பினர்கள் அன்புராஜ், இந்திய தொழில்நுட்ப கழக பேராசிரியர் மோகன், ஐநாசபை உணவு வேளாண்மை நிறுவன முன்னாள் இயக்குநர் ராமலிங்கம், பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஜெகதீசன், தமிழக காவல் துறையின் முன்னாள் இயக்குனர் அலெக்சாண்டர், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் முரளி குமரன், பதிவாளர் ஸ்ரீவித்யா, தேர்வு கட்டுப்பாட்டு நெறியாளர் அசோகன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

க.சசிகுமார் நிருபர்.
https://thanjai.today/