தஞ்சை மே 15 : தஞ்சை அருகே பிள்ளையார்பட்டியில் தமிழ்நாடு அரசு சத்துணவு பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் மாநில தலைவர் ஆறுமுகம் தலைமையில் காணொலி காட்சி வாயிலாக நடந்தது.

இதில் மாநில பொதுச் செயலாளர் செயலாளர் ராமலிங்கம், துணைத்தலைவர் நாக சூர்யா மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மாநில தலைவர் ஆறுமுகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கடந்த காலங்களில் ஏற்பட்ட புயல் மற்றும் பேரிடர் காலங்களில் தமிழ்நாடு அரசு சத்துணவு பணியாளர் சங்கம் சார்பில் தனது பங்களிப்பை தமிழக அரசுக்கு நிவாரணத் தொகை வழங்கி வந்துள்ளது. தற்போது கொரோனாவுக்கு எதிரான போரில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

அதனால் தமிழக அரசுக்கு உதவிடும் வகையில் தமிழ்நாடு அரசு சத்துணவு பணியாளர் சங்க ஊழியர்களின் ஒருநாள் ஊதியத்தை வழங்குவது என ஏகமனதாக முடிவு எடுக்கப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்.