தஞ்சாவூர் டிச 10 -கல்லணையின் அழகை தமிழக கவர்னர் ஆர் என் ரவி மனைவியுடன் ரசித்துப் பார்த்தார் அப்போது நீர்ப்பாசன விவரங்களை கலெக்டரிடம் கேட்டறிந்தார் தஞ்சை திருவாரூர் நாகை மயிலாடுதுறை ஆகிய காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாய பாசனத்திற்காக தண்ணீர் பகிர்ந்தளிக்கும் அணையாக விளங்குவது கல்லணையில் இருந்து காவிரி வெண்ணாறு கல்லணைக் கால்வாய் (புதுஆறு) கொள்ளிடம் ஆகிய ஆறுகள் பிரிந்து சென்று காவிரி டெல்டா மாவட்டங்களில் பலப்படுத்துகின்றன மிகவும் பழமையான கல்லணையை தமிழக கவர்னர் ஆர் எம் ரவி தனது மனைவி லட்சுமி ரவியுடன் பார்வையிட்டார்.

அப்போது கல்லணை ஆய்வு மாளிகைக்கு எதிரில் உள்ள மேடையில் இருந்தபடி கல்லணையில் தேங்கியிருக்கும் தண்ணீரை அணைகளின் அழகையும் பார்த்து ரசித்தார் கல்லணையில் தண்ணீர் தேங்கி இருக்கும் இடம் கல்லணையின் சிறப்பு நீர்ப்பாசனம் குறித்து கவர்னருக்கு தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் காவிரி வடிநில கோட்ட தலைமை பொறியாளர் ராமமூர்த்தி ஆகியோர் விளக்கிக் கூறினார்கள் அதை கவனமாக கேட்டறிந்தார்.

காவிரி பாசனப் பகுதியில் பயந்து ஓடும் ஆறுகள் குறித்த விளக்கத்தையும் கவர்னர் பார்வையிட்டார் அப்போது தஞ்சை மாவட்ட கூடுதல் ஆட்சியர்கள் சுத்திரா ஸ்ரீகாந்த் தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் ரவிப்பிரியா கண்காணிப்பு பொறியாளர்கள் அன்பரசன் திருவேட்டை செல்வம் வருவாய் கோட்டாட்சியர் ரஞ்சித் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

கல்லணையில் உள்ள கொள்ளிடம் காவிரி வெண்ணாறு கல்லணைக் கால்வாய் ஆகிய ஆறுகளின் பாலங்களில் காரில் பயணித்த படி அவர் பார்வையிட்டார் அப்போது பாலத்தில் உள்ள கரிகாலன் சிலை பாலத்தின் மதகுகள் வழியாக தண்ணீர் வெளியேறும் காட்சியையும் கவர்னர் பார்த்து ரசித்தார் முன்னதாக கல்லணைக்கு வருகைதந்த கவர்னரை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மற்றும் அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

க.சசிகுமார் நிருபர்
https://thanjai.today/