தஞ்சாவூர் செப்: 4- தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அரசு மகளிர் கலைக் கல்லூரி மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது.

தமிழகத்தில் கொரோனா தொற்றின் காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளி மற்றும் கல்லூரிகளை தமிழக அரசு மீண்டும் திறக்க ஆணையிட்டது.

அதன்படி கும்பகோணத்தில் அரசு மகளிர் கல்லூரி திறக்கப்பட்டது, இந்நிலையில் கல்லூரி நிர்வாகம் கொரோனா நோய் தொற்று தடுக்கும் விதமாக கல்லூரி மாணவிகள் மற்றும் பேராசிரியர்களுக்கு 100 கோவாக்ஸின் மற்றும் 100 கோவிசில்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு முகாம் நடத்தினர்.

இதில் மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்று தடுப்பூசி செலுத்திக்கொண்டனர், இதுவரை தடுப்பூசி போடாத மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் தொடர்ந்து கல்லூரியில் செலுத்தப்படும் என கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.

செய்தி க.சசிகுமார் நிருபர்.
https://thanjai.today/