தஞ்சை மே 07: பட்டுக்கோட்டையில் கொரோனா விதிமுறைகளை மீறி கடைகளை திறந்து வைத்திருந்த 9 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மெடிக்கல், ஹோட்டல், பால் பொருள்கள் விநியோகம் தவிர வணிக நிறுவனங்கள் ஏதும் இயங்ககூடாது என அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் பட்டுக்கோட்டையில் விதிமுறைகளை மீறியும், சில கடைகள் முன்பக்க கதவை மூடிவிட்டு பின்பக்கமாக வாடிக்கையாளர்களுக்கு பொருட்கள் வழங்குவது தொடர்பாக வருவாய்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

கிராம நிர்வாக அலுவலர் மற்றும் நகாரட்சி துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்ட போது விதி முறைகளை மீறி பகல் 12 மணிக்கு பிறகு செயல்பட்ட டீக்கடை, மாவுகடை, கோழி கடை, நிதி நிறுவனம், ஏர்டிராவல், ஜெராக்ஸ் கடை உள்ளிட்ட 9 கடைகளுக்கு தலா ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் இனி வரும் காலங்களில் விதிமுறைகளை மீறக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டது.

செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்.