தஞ்சை மே 14 தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை பெருமாள் கோயிலில் புது ரோட்டில் உள்ள கரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை மாவட்ட கண்காணிப்பு அலுவலர்கள் ஐஐஎஸ் ‍அலுவலர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்து மையத்தில் வழங்கப்பட்டு வரும் உணவு பற்றியும். சிகிச்சை பற்றியும் அவர்களுடைய உடல் நிலை குறித்தும் கேட்டறிந்தார்கள்.

தொடர்ந்து பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டு ஆக்ஸிசன் இருப்பு படுக்கை வசதிகள் குறித்தும் தலைமை மருத்துவ அலுவலர் டாக்டர் அன்பழகனிடம் கேட்டறிந்தார், முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது தஞ்சை மாவட்டத்தை பொறுத்தவரை கொரோனா பாதித்தவர்கள் பயன்படுத்துவதற்காக படுக்கை வசதிகள் போதுமான அளவு கையிருப்பு உள்ளது மிக முக்கியமாக ஆக்சிஜன் குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது போதுமான அளவிற்கு கையிருப்பு உள்ளது.

தேவைக்கு ஏற்ப அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் படுக்கை வசதிகள் மற்றும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடமில்லை, கொரோனா தொற்று லேசாக உள்ளவர்கள் முடிந்தவரை அவரவர் வீடுகளிலேயே தங்களைத் தனிமைப் படுத்திக் கொள்ளலாம், அபாய கட்டம் வரை வீட்டில் இருக்கக்கூடாது தற்போது நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

தேவைப்படும் பட்சத்தில் கிராமப்புறங்களில் இன்னும் கூடுதலாக கொரோனா விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படும் என்றார், ஆட்சியர் கோவிந்தராவ், பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் பாலச்சந்தர் வட்டாட்சியர் (பொறுப்பு) சாந்தகுமார், மற்றும் வருவாய்த்துறையினர் உடனிருந்தனர்..

இந்த கொரோனா பெருந்தொற்று காலத்தில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அவர்கள், சுழன்று பணியாற்றி வருவது, அரசு அலுவலர்களுக்கும் பொது மக்களுக்கும் மகிழ்ச்சியையும் அறுதலையும் தருவதாக உள்ளது.

செய்தி க.சசிகுமார் நிருபர்.
தஞ்சை