தஞ்சாவூர் டிச 03 மன்னார்குடியிலிருந்து பட்டுக் கோட்டை செல்வதற்கு சாலை வழி உள்ளது அந்தச் சாலையில் இன்று நெடுவாக்கோட்டை என்ற கிராமத்திற்கு அருகில் இருசக்கரத்தில் வந்த இளைஞர் விபத்தினால் கிழே விழுந்து அவரது இதய துடிப்பு நின்று விட்டது.

அந்த சமயம் அந்த வழியில் சென்ற அரசு மருத்துவமனையில் பணியாற்றும் வனஜா என்பவர் உடனடியாக அந்த இளைஞருக்கு இதயத்தை அழுத்தி மீண்டும் இயங்கச்செய்யும் சி.பி.ஆர் முதலுதவி (Cardiopulmonary resuscitation) செய்து இதயத்தை இயக்க நிலைக்கு கொண்டு வந்து அவரை உயிர்பிக்கச் செய்தார், 108 ஆம்புலன்ஸ் வருவதற்குள் செவிலியர் வனஜா அவர்கள் செய்த அந்த முதல் உதவியால் கருவாக்குறிச்சி என்ற கிராமத்தை சேர்ந்த அந்த இளைஞரின் உயிரினை காப்பாற்ற முடிந்தது.

இயக்கமற்று கிடந்த இளைஞரை சி.பி.ஆர் சிகிச்சை மூலம் உயிர்பிக்க செய்தது அங்கிருந்த மக்கள் அனைவரும் செவிலியர் வனஜா அவர்களை பாராட்டி வருகின்றனர். பதட்டமின்றி தனது மருத்துவ அநுபவத்தில் இளைஞரை உயிர் பிழைக்க வைத்த அவரை எல்லோரும் உளமாற பாராட்டி வருகின்றனர்.

நிருபர் தஞ்சை டுடே
https://thanjai.today/