தஞ்சை பிப்.7, காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி, தஞ்சையில் 6வது நாளாக சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் ஒப்பாரி வைத்து போராட்டம் நடத்தினர், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் ஐந்தாவது நாளாக தஞ்சை ரயில்வே பாதுகாப்பு படை போலீஸ் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம்.

மாவட்டத் தலைவர் கோதண்டபாணி தலைமை தாங்கினார், மாவட்ட செயலாளர் ரங்கசாமி முன்னிலை வகித்தார், ஆர்ப்பாட்டத்தை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணிமாநில செயற்குழு உறுப்பினர் சார்லி தேவப்பிரிய தொடங்கிவைத்து பேசினார் மாநில செயலாளர் சண்முகம் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினார்.

அரசு ஊழியர்கள் பல்வேறு கோஷங்களை எழுப்பியபடி ஊர்வலமாக புறப்பட்டு சென்று தஞ்சை காந்திஜி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர், சத்துணவு அமைப்பாளர்கள் பங்கேற்றனர், போராட்டத்தில் பங்கேற்றவர்கள் பெண்கள் சிலர் ஒப்பாரி வைத்து அழுதனர். மறியல் போராட்டத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். அரசு விலைப்படி சரண்டர், உள்ளிட்ட பறிக்கப்பட்ட உரிமைகளை மீண்டும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது.

கொரோனா நோய் தொற்று ஏற்பட்டு இறந்த அரசு ஊழியர்களுக்கு ரூபாய் 50 லட்சம் நோயினால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு ரூபாய் 3 லட்சம் வழங்க வேண்டும் அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பவேண்டும் அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

இந்த மறியல் போராட்டம் தஞ்சை ரயில் நிலையம் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது மறியலில் ஈடுபட்டவர்களை மேற்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் தலைமையிலான போலீசார் கைது செய்து மினி பேருந்தில் ஏற்றி சென்றனர் சுமார் 50 பெண்கள் உட்பட 100 பேருக்கு மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

செய்தி க.சசிகுமார் நிருபர்
தஞ்சை.