தஞ்சை மே 17: தஞ்சை மாவட்டம் பேராவூரணி பேரூராட்சி, ஆதனூரில் வீடு வீடாக சென்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

ஆதனூா் கிராமத்தில், ஆட்சியா் , பட்டுக்கோட்டை சார் ஆட்சியா் உத்தரவின் பேரில் கொரோனா பரிசோதனை மற்றும் மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமை பேரூராட்சி செயல் அலுவலா் மணிமொழியன் முன்னிலையில், வட்டார மருத்துவ அலுவலா் செளந்தரராஜன் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் வழங்கி தொடங்கி வைத்தார்.

தொடா்ந்து, ஆதனூா், கருப்பமனை மற்றும் கூப்புளிக்காடு ஆகிய பகுதிகளை சுற்றியுள்ள வீடுகளுக்கு சென்று சுமார் 50-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. முகாமில் வட்டார மருத்துவ மேற்பார்வையாளா் சந்திரசேகா், துப்புரவு ஆய்வாளா் அன்பரசன், சுகாதார ஆய்வாளா் ராம்குமார், கிராம மேல்மட்ட குழு உறுப்பினா் ஆா்தா், பேராசிரியா் வேத. கரம்சந்த் காந்தி மற்றும் பலர் கலந்து கொண்டனா்.

செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்.