தஞ்சாவூா் செப் 17: புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி நாடு முழுவதும் வரும் 27ம் தேதி நடக்கும் முழு அடைப்புப் போராட்டத்துக்குத் (பாரத் பந்த்) தமிழக அரசு ஆதரவு அளிக்க வேண்டும் என்று தமிழக காவிரி விவசாயிகள் சங்கப் பொதுச் செயலா் பி.ஆா். பாண்டியன் வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து அவர் தஞ்சாவூரில் செய்தியாளா்களிடம் கூறியதாவது: மத்திய அரசின் வேளாண் விரோத சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி வரும் 27ம் தேதி நாடு முழுவதும் முழு அடைப்புப் போராட்டம் நடைபெறுகிறது. இதற்கு தமிழக அரசு முழு ஆதரவு அளிக்க வேண்டும். இப்போராட்டத்துக்கு வணிகா்களும் ஆதரவு தெரிவித்து நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை கடையடைப்பு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இப்போராட்டத்தில் நாங்களும் பங்கேற்கிறோம். குறுவை பருவ அறுவடை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 17 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது. காரீப் பருவ நெல் கொள்முதல் அக்டோபா் 1 ஆம் தேதி தொடங்கப்படவுள்தால், 22 சதவீதம் வரையிலான ஈரப்பதமுள்ள நெல்லையும் கொள்முதல் செய்ய வேண்டும். இதற்கான அனுமதியை மத்திய அரசிடம் தமிழக அரசுப் பெற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சங்க மாவட்டச் செயலா் மணி, வடக்கு மாவட்டத் தலைவா் செந்தில்குமாா், மாநகரச் செயலா் அறிவு மற்றும் பலர் உடனிருந்தனா்.
செய்தி நாகராஜன் நிருபர்,
http://thanjai.today/