தஞ்சை மே 24: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் நகராட்சி சார்பில் அனைத்து வார்டுகளிலும் 15 சரக்கு வாகனங்கள், 40 தள்ளுவண்டிகள் மூலம் காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று முதல் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மருந்தகங்கள், பால் நிலையங்கள் தவிர பிற கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை. மக்கள் காய்கறி, பழங்கள் போன்றவற்றை வாங்குவதற்கு நகராட்சிகள் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அந்த வகையில் அனைத்து வார்டுகளிலும் 15 சரக்கு வாகனங்கள், 40 தள்ளுவண்டிகள் மூலம் காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கும்பகோணத்தில் பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான காய்கறி மற்றும் பழங்களை தெருக்களுக்கு வாகனங்களில் கொண்டு வரும்போது, வாங்கிக் கொள்ளலாம். தேவையில்லாமல் வெளியில் வருவதைத் தவிர்த்து, கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசுக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என நகராட்சி ஆணையா் லெட்சுமி தெரிவித்துள்ளார்.