தஞ்சாவூர் அக்.23- தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வங்கி காலி பணியிடங்கள் எழுத்துத் தேர்வுக்கு இலவசப் பயிற்சி வகுப்பு வருகிற இருவத்தி ஏழாம் தேதி நடைபெறுகிறது தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அளித்துள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது.
தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் வாயிலாக மத்திய மாநில அரசுகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் அறிவிக்கப்படும் பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு இந்த அலுவலகத்தின் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக சிறப்பு வல்லுநர்களைக் கொண்டு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
தற்போது இந்திய ஒன்றிய அரசின் வங்கி பணியாளர் தேர்வு நிறுவனத்தால் இந்தியன் வங்கி யூனியன் வங்கி கனரா வங்கி உட்பட பல்வேறு பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள எழுத்துப் பணிக்காக 7800க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கான விளம்பர அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது 17 2021 தேதிப்படி 20 முதல் 28 வயதுக்கு உட்பட்ட பட்டப்படிப்பு முடித்த பட்டதாரிகள் இப்பணியிடங்களுக்கு என்ற www.ibps.in இணையதளம் வாயிலாக உரிய கட்டணத்துடன் வருகிற 27ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் உச்ச பட்ச வயது வரம்பில் அட்டவணைப்படுத்தப்பட்ட சாதியினர் மற்றும் பழங்குடியினருக்கு 5 ஆண்டுகளும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 3 ஆண்டுகளும் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் தளர்வு உண்டு தேர்வானது இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மட்டும் நடத்தப்பட்டு வந்த நிலையில் இவ்வாண்டு முதல் தமிழ் உள்பட 13 மாநில மொழிகளிலும் நடைபெற உள்ளது.
இத்தேர்வுக்கான கணினி வழி எழுத்துத் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு மற்றும் மாதிரி தேர்வுகள் வரும் 17ஆம் தேதி காலை 11 மணி முதல் தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டுதல் மையத்தில் நடைபெற உள்ளது இதில் கலந்து கொள்ள விரும்புவோர் 8170 91 99 90 என்ற வாட்ஸ்அப் என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் பெயர் மற்றும் கல்வித்தகுதியை தெரிவிப்பதோடு விளக்க வகுப்பில் நேரடியாக கலந்து கொண்டு பயனடையலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது அல்லது studycircletnj@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ தங்கள் பெயர் மற்றும் கல்வித் தகுதியை தெரிவிப்பதோடு விளக்க வகுப்பில் நேரடியாக கலந்து கொண்டு பயனடையலாம் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
க.சசிகுமார் நிருபர்.
http://thanjai.today/