தஞ்சாவூர் ஆக் 08: போட்டித் தேர்வுகளுக்கு இலவச விளக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி வரும் 12ம் தேதி காலை 11 மணியளவில் தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டுதல் மையத்தில் நடக்க உள்ளது என்று கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழி காட்டும் மையம் வாயிலாக ஒன்றிய, மாநில அரசுகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களால் அறிவிக்கப்படும் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இவ்வலுவலகத்தின் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக சிறப்பு வல்லுநர்களை கொண்டு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

தற்போது ஒன்றிய அரசின் பணியாளர் தேர்வாணையத்தால் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பல்நோக்கு பணியாளர், பெண்கள் படை பயிற்சி பயிற்றுவிப்பாளர், மருத்துவ உதவியாளர், பொறுப்பாளர் ஆகிய நிலை-9 தேர்வுபணிகளுக்கு ((Phase-IX/Selection Post) 3261 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்பணியிடங்களுக்கு https://ssc.nic.in/ என்ற தேர்வாணையத்தின் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு உரிய கட்டணத்துடன் இணைய வழியாக விண்ணப்பிக்க கடைசிநாள் வரும் 25ம் தேதி ஆகும். அனைத்து காலிப் பணியிடங்களுக்கும் விண்ணப்பிக்கும் வயதானது கடந்த ஜனவரி 1ம் தேதிப்படி 18 முதல் 30 வயதுக்குள் பணியிடத்தைப் பொறுத்து வேறுபடும்.

மேலும் உச்சபட்ச வயது வரம்பில் அட்டவணைப்படுத்தப்பட்ட சாதியினர் மற்றும் பழங்குடியினர்களுக்கு 5 ஆண்டுகளும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் தளர்வு உண்டு. இத்தேர்வு குறித்தும், பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் இதர தேர்வுகள் குறித்தும் இலவச விளக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி வரும் 12ம் தேதி காலை 11 மணியளவில் தஞ்சாவூர் மாவட்டவேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டுதல் மையத்தில் நடக்க உள்ளது.

இவ் விளக்க வகுப்பில் கலந்துகொள்ள விரும்பும் இளைஞர்கள் 8110919990 என்ற வாட்ஸ் ஆப் எண்ணுக்கோ அல்லது studycircletnj@gmail.com என்றமின்னஞ்சல் முகவரிக்கோ தங்கள் பெயர் மற்றும் கல்வித் தகுதியை தெரிவிப்பதோடு, விளக்க வகுப்பில் நேரடியாக கலந்துகொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இத்தேர்வுக்கான பாடக்குறிப்புகள் மற்றும் மாதிரித் தேர்வுகள் தமிழ்நாடுஅரசின் வேலைவாய்ப்புமற்றும் பயிற்சித்துறையின் ; https://tamilnaducareerservices.tn.gov.in/ என்றமெய்நிகர் கற்றல் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அரசு வேலை பெறவிரும்பும் அனைத்து இளைஞர்களும் குறிப்பாக கிராமப்புற இளைஞர்கள் அதிக அளவில் பயன்பெற இவ்விணையம் உருவாக்கப்பட்டுள்ளது.https://tamilnaducareerservices.tn.gov.in/

எனவே இதில் பதிவுசெய்து போட்டித் தேர்வு வாயிலான அரசுப் பணிகளுக்கான பாடக்குறிப்புகளை பதிவிறக்கம் செய்து படித்துப் பயனடையலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

‍செய்தி நாகராஜன் நிருபர்.
https://thanjai.today/