தஞ்சாவூர் அக் 25: தஞ்சாவூர் நேஷனல் பார்மா மருத்துவமனையில் தஞ்சை மாவட்ட காவல்துறையை சேர்ந்தவர்களுக்கு ரத்த பரிசோதனை ரத்த அழுத்தம் உட்பட பல்வேறு பரிசோதனைகள் உடல் பரிசோதனைகள் இலவசமாக நடத்தப்பட்டது.

நிகழ்ச்சிக்கு எஸ். பி. ரவளி பிரியா தலைமை வகித்து பேசினார். டி.எஸ்.பி. கபிலன், நேஷனல் பார்மா மருத்துவமனை நிர்வாக இயக்குனர் முஜிபுர் ரகுமான், இயக்குனர் முகமது அலி ஆகியோர் கலந்து கொண்டனர்.

முகாமில் நேஷனல் பார்மா இணை இயக்குனர் சிவக்குமார் கூறுகையில், இம் மருத்துவ முகாமை எங்களது நிர்வாகம் காவல்துறைக்கு வாரம் ஒரு முறை என தஞ்சை மாவட்டம் முழுவதும் ஒரு நாள் முகாம் என்ற அடிப்படையில் வழங்க உள்ளதாக தெரிவித்தார்.

முகாமில் காவல்துறை ஆண், பெண் காவலர்கள் சுமார் 60 பேர் முகாமில் கலந்துகொண்டு ரத்த அழுத்தம், ரத்தப் பரிசோதனை மற்றும் ஈசிஜி போன்றவை எடுக்கப்பட்டு அவர்களது பரிசோதனை முடிவுகள் அளிக்கப்பட்டது.

முகாம் ஒருங்கிணைப்பாளராக போக்குவரத்து காவல் பிரிவு இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் செயலாற்றினார்.

நாகராஜன் நிருபர்.
https://thanjai.today/