தஞ்சாவூர் ஆக 07: தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் நாளை 8ம் தேதி இலவச மூட்டு தேய்மான பரிசோதனை முகாம் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பழைய ஸ்டேட் பேங்க் எதிரில் உள்ள ஊராட்சி ஒன்றிய கிழக்குத் தொடக்கப்பள்ளியில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை இலவச மூட்டு தேய்மான பரிசோதனை முகாம் நடைபெறுகிறது.
பேராவூரணி லயன்ஸ் சங்கம், பேராவூரணி வின்ஸ்டார் பில்டர்ஸ் மற்றும் நாமக்கல் இமயம் மருத்துவமனை இணைந்து நடத்தும், இந்த மருத்துவ முகாமில் சிறப்பு மருத்துவர்கள் கலந்து கொண்டு பொதுமக்களை பரிசோதிக்க உள்ளனர்.
இதில் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு, தேவையான அனைத்து பரிசோதனைகளும், அறுவை சிகிச்சை, உணவு மற்றும் தங்குமிடம் அனைத்தும் இலவசமாக வழங்கப்படும்.
எனவே, பேராவூரணி மற்றும் சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று லயன்ஸ் சங்கத் தலைவர் ஏ.சி.சி. ராஜா, செயலாளர்கள் சரவணன், கோபால், பொருளாளர் எஸ். அருண் ஆகியோர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
செய்தி நாகராஜன் நிருபர்.
http://thanjai.today/