தஞ்சாவூர்: தமிழகம் முழுவதும் கொரோனா 2வது அலையால் மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து கொரோனா பரிசோதனை முகாம்கள் தமிழகம் முழுவதும் நடந்து வருகிறது.

அந்தவகையில் தஞ்சாவூர் மாவட்டம் வடக்குமாங்குடி ஊராட்சியில் இலவச கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது. .

ஊராட்சித் தலைவர் கலைச்செல்விகனகராஜ் முகாமினை தொடங்கி வைத்தார். இதில் மெலட்டூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ குழுவினர் கிராம மக்களுக்குக் கொரோனா பரிசோதனை செய்தனர். ஏற்பாடுகளை ஊராட்சி செயலாளர் ஜெகத்குரு மற்றும் மெலட்டூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவக்குழுவினர் செய்து இருந்தனர்.