தஞ்சை பிப் 17 விவசாயிகளின் கூட்டுறவு வங்கிக் கடன் தள்ளுபடியில் மோசடி, கூட்டுறவு வங்கி அதிகாரிகள் விவசாயிகள் கடன் பெற்றது போல் போலியான ரசீது தயார் செய்து அதிகாரிகளே மோசடி செய்துவிட்டதாகவும் கூட்டுறவு வங்கி அதிகாரியை முற்றுகையிட்டு விவசாயிகள் கண்டனம்:

பேட்டி: 1 ரவிச்சந்தர் – விவசாயி (3 வது பேட்டி)

2 திரு. கண்ணன்- தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ( 4வது பேட்டி)

3 திரு. கோவிந்தராஜ் – விவசாயி (முதல் பேட்டி )

4 திரு. ராமசாமி – விவசாயி (2வது பேட்டி)

தஞ்சை விவசாயிகளின் குறைதீர்க்கும் கூட்டம் கோட்டாட்சியர் அலுவலகத்தில், கோட்டாட்சியர் திருமதி. வேலுமணி தலைமையில் நடைபெற்றது

கூட்டத்தில் பேசிய விவசாயிகள்

தமிழக அரசு அறிவித்த கூட்டுறவு வங்கிக்கடன் தள்ளுபடி அறிவிப்பில் ஏராளமான மோசடி நடைபெற்றுள்ளது

விவசாயிகளிடம் சிட்டா அடங்கலைப் பெற்ற விவசாயிகள் விவசாயிகள் பெயரில் 5 லட்சம் 10 லட்சம் ரூபாய் வரை விவசாயிகளுக்கு கடன் கொடுத்ததாகவும் அவற்றை தள்ளுபடி செய்துவிட்டதாகவும் அதிகாரிகள் சிலர் மோசடி செய்துவிட்டதாகவும் புகார் கூறிய விவசாயிகள்

கூட்டத்தில் பங்கேற்ற கூட்டுறவு துறை அதிகாரி மனோகரை முற்றுகையிட்ட விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் விரைவாக நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் கூறி வெளிநடப்பு செய்த விவசாயிகள் கோட்டாட்சியர் அலுவலகம் வாயிலில் கண்டன ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

செய்தி க.சசிகுமார் நிருபர்,
தஞ்சை.