தஞ்சாவூர் நவ.23- மக்களுக்கு சேவை செய்யும் பொதுத் துறைகளை பாதுகாப்போம் தொழிலாளர் உரிமைகளை பாதுகாப்போம் தொழிற்சங்க தலைவர் தியாகராஜன் நினைவு நாளில் உறுதி ஏற்பு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் ,ஏஐடியூசி தொழிற்சங்கத்தின் தேசிய துணை தலைவரும், தமிழ் மாநில குழுவின் முன்னாள் பொதுச் செயலாளருமான எஸ் .எஸ். தியாகராஜன் 8-ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வு தஞ்சாவூரில் மாவட்ட ஏஐடியூசி அலுவலகத்தில் மாவட்ட தலைவர் வெ.சேவையா தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் ஆர்.தில்லைவனம்,பொருளாளர் தி.கோவிந்தராஜன், துணைசெயலாளர் துரை.மதிவாணன், வங்கி ஊழியர் சங்க மாவட்ட பொதுச்செயலாளர் க.அன்பழகன், நுகர்பொருள் வாணிபக் கழக சங்க நிர்வாகி சி.பாலையன், கும்பகோணம் அரசு போக்குவரத்து கழக சங்க கெளரவ தலைவர் கே.சுந்தர பாண்டியன், தெரு வியாபார சங்க மாவட்ட செயலாளர் ஆர்.பி.முத்துகுமரன், கட்டுமான சங்க மாவட்ட பொருளாளர் பி.செல்வம் ,இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் ஜி.கிருஷ்ணன், மாவட்ட பொருளாளர் என்.பாலசுப்பிர மணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
எஸ்.எஸ்.தியாகராஜன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர்களில் ஒருவராகவும், ஏஐடியூசி தொழிற்சங்கத்தின் தமிழ் மாநிலக் குழுவின் பொதுச் செயலாளராக பணியாற்றியவர். இவர் பொறியாளராக பட்டம் முடித்து தமிழ்நாடு அரசின் பொதுப்பணித் துறையில் பொறியாளராக பணியேற்று தொழிலாளர்கள், மக்கள் படும் துயரங்களுக்கு விடிவு காண, சமூக மாற்றத்தின் மூலம் தான் வளமான வாழ்க்கையை காண முடியும் என்ற கருத்தில் நம்பிக்கை வைத்து பொறியாளர் பதவியை ராஜினாமா செய்து தனது இறுதி நாள் வரை கட்சிக்காகவும் மக்களுக்காகவும் பணியாற்றியவர்.
மார்க்சிய அறிஞர், சிறந்த பேச்சாளர், எழுத்தாளரரும் ஆவார். அவருடைய நினைவு நாளில் மக்களுக்கு சேவை செய்கிற வங்கி, இன்சூரன்ஸ், போக்குவரத்து, இரயில்வே மற்றும் நிலக்கரி, பிஎச்இஎல், இராணுவ தளவாட உற்பத்தி சாலை உள்ளிட்ட மத்திய நிறுவனங்களை கார்ப்பரேட் பெரும் நிறுவனங்களுக்குதாரை வார்க்கும் மத்திய அரசின் நடவடிக்கை கைகளிலிருந்து பாதுகாக்கவும், போராடிப் பெற்ற தொழிலாளர்கள் உரிமைகள், தொழிற்சங்க உரிமைகளை பாதுகாக்கவும் உறுதியேற்கப் பட்டது. முன்னதாக அவரது உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
க.சசிகுமார் நிருபர்.
https://thanjai.today/