கிறிஸ்துமஸ், ஏகாதசியை ஒட்டி தஞ்சையில் பூக்கள் விலை கிடு கிடு என உயர்ந்துள்ளது குறிப்பாக மல்லிகை பூ கிலோ ரூபாய் 3000க்கு விற்பனைச் செய்யப்படுகிறது.

மல்லிகை பூ மட்டுமல்லாமல் முல்லைப்பூ, காட்டு மல்லி, ஜாதி மல்லி, செவ்வந்தி, சம்பங்கி பூக்களும் விலை உயர்ந்துள்ளது அதனால் பொதுமக்கள் குறைந்த அளவே பூக்களை வாங்கிச் சென்றனர்.

இதுகுறித்து தஞ்சை பூ சந்தையில் பூ வியாபாரிகள் கூறும்போது மார்ச் ஏப்ரல் மே ஜூன் மாதங்களில் மல்லிகை பூக்கள் விளைச்சல் அதிகமாக இருக்கும், நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் விளைச்சல் குறைவாக இருக்கும்.

தற்போது கடும் பனிப்பொழிவால் மல்லிகை விளைச்சல் வழக்கத்தை விட குறைந்து உள்ளது, அது மட்டுமல்லாமல் பண்டிகையையும் சேர்ந்ததால், தற்பொழுது பூக்கள் விலை குறிப்பாக மல்லிகைப்பூ விலை அதிகமாக உயர்ந்துள்ளது என்று கூறினர்.