தஞ்சாவூர் : தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் முக்கிய வீதிகள் வழியாக அதிவிரைவு படையினர் மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்ட கொடி அணிவகுப்பு நடந்தது.

பட்டுக்கோட்டை நகர காவல்நிலையத்தில் சட்டம், ஒழுங்கு நிலைமை குறித்து மத்திய அதிவிரைவு படை டிஎஸ்பி கார்த்திகேயன் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

இதில் பட்டுக்கோட்டை டிஎஸ்பி செங்கமலக்கண்ணன், இன்ஸ்பெக்டர் ராஜேஷ், எஸ்ஐக்கள் முத்துக்குமார், ரவிச்சந்திரன், டிராபிக் எஸ். ஐ. , செல்வராஜ், காவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து பட்டுக்கோட்டை நகரம் மற்றும் சுற்று வட்டார காவல்நிலையப் பகுதியில், சட்டம், ஒழுங்கு சீர்குலைவு ஏற்பட்டால் உடனடியாக களத்தில் இறங்கி நடவடிக்கை எடுக்கவும் கூட்டத்தில் ஆலோசனை வழங்கப்பட்டது.

பின்னர், பொதுமக்கள் இடையே நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில், காவல் நிலையத்தில் இருந்து, சின்னையாத் தெரு, தேரடித் தெரு, மார்க்கெட் ரோடு, பெரிய தெரு முக்கிய வீதிகள் வழியாக அதிவிரைவு படையினர், காவல்துறையினர் கலந்து கொண்ட கொடி அணிவகுப்பு நடந்தது. இது மீண்டும் பேருந்து நிலையத்தை வந்தடைந்தது.

செய்தி நாகராஜன் நிருபர்.
https://thanjai.today/