தஞ்சை சூலை :16 – நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கோடியக்கரையில் மணியன்தீவு ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், பெரியகுத்தகை வெள்ளப்பள்ளம் வானவன் மகாதேவி உள்ளிட்ட பகுதிகளில் ஆழ்கடல் பகுதிகளில் தொடர்ந்து கடல் சீற்றமாக காணப்படுவதால் குறைந்த அளவே பைபர் படகில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்.

இந்த நிலையில் பாதுகாப்புத் துறையில் இருந்து பைபர் படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் களுக்கு குறைந்த அளவே சீலா மீன்கள் கிடைத்தன பல மீனவர்கள் மீன்கள் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் வெறும் கையுடன் கரை திரும்பினர்.

இதுகுறித்து ஆறுகாட்டுத்துறை மீனவர்கள் கூறியதாவது கடந்த 2 நாட்களாக கடல் சீற்றமாக காணப்படுவதால் மீன்கள் அதிக அளவில் கிடைப்பதில்லை சிறிய பைபர் படகில் 5 முதல் 10 கிலோ மீன்கள் கிடைக்கின்றன இதனால் கடலுக்குச் சென்று வரும் டீசல் செலவுக்கு கூட கட்டுப்படி ஆகவில்லை இதனால் பெரும்பாலான மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் தங்கள் பைபர் படகுகளை கரையோரம் நிறுத்தி வைத்துள்ளனர்.

ஆறுகாட்டுத்துறையில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பைபர் படகுகளில் மீன்பிடிக்க செல்வார்கள் ஆனால் கடந்த இரண்டு நாட்களாக பத்துக்கும் குறைவான படகுகளே மீன்பிடிக்க செல்கின்றனர் குறைந்த அளவில் மீன்கள் கிடைப்பதால் மீனவர்கள் கடலுக்கு அதிக அளவில் செல்ல வில்லை இருந்தாலும் குறைந்த அளவில் வரும் மீன்களுக்கு நல்ல விலை கிடைத்தது என்றனர்.

செய்தி க.சசிகுமார் நிருபர்.
https://thanjai.today/