தஞ்சாவூர் அக்.5- தஞ்சாவூர் மாவட்டத்தில் கலை அறிவியல் கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவ மாணவிகளுக்கு நேரடி வகுப்பு தொடங்கியது ஒரு நாள் விட்டு ஒரு நாள் நேரடியாக பாடம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்துள்ளதால் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் கடந்த மாதம் 1-ஆம் தேதி முதல் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் பொறியியல் தொழில்நுட்ப டிப்ளோமா கல்லூரிகள் கடந்த மாதம் 1ஆம் தேதி திறக்கப்பட்டன திங்கள் புதன் வெள்ளி ஆகிய மூன்று நாட்கள் இளங்கலை இரண்டாம் ஆண்டு மாணவ மாணவிகளுக்கு வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

செவ்வாய் வியாழன் சனி ஆகிய மூன்று நாட்கள் மூன்றாம் ஆண்டு மாணவ மாணவிகளுக்கு நேரடி வகுப்பு நடைபெற்று வருகிறது முதலாமாண்டு மாணவ மாணவிகளுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வந்தன இந்நிலையில் நேற்று முதல் நேரடி வகுப்புகள் முதலாமாண்டு மாணவ மாணவிகளுக்கு தொடங்கியது தஞ்சை மன்னர் சரபோஜி அரசு கலைக் கல்லூரியில் படிக்கும் முதலாமாண்டு மாணவ மாணவிகள் மிகவும் உற்சாகத்துடன் கல்லூரிக்கு வந்தனர்.

கொரோனா தொற்று காலம் என்பதால் சமூக இடைவெளியை கடைபிடித்து வகுப்புகளுக்கு சென்றனர் அவர்களுக்கு சனிடைசர் வழங்கப்பட்டதுடன் உடல் வெப்ப நிலையும் கண்டறியப்பட்டது. ஒரு வகுப்பறையில் 20, 25, பேர் அமர வைக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

ஏற்கனவே இரண்டாம் ஆண்டு மூன்றாம் ஆண்டு மாணவ மாணவிகளுக்கு வாரத்தில் மூன்று நாட்கள் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. அதேபோல முதலாமாண்டு மாணவ மாணவிகளுக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் நேரடி வகுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி திங்கள், புதன், வெள்ளி, ஆகிய மூன்று நாட்கள் கலை பாடப்பிரிவு மாணவ-மாணவிகளும் செவ்வாய், வியாழன், சனி, ஆகிய மூன்று நாட்கள் அறிவியல் பாடப்பிரிவு மாணவ மாணவிகளுக்கும் நேரடி வகுப்புகள் நடைபெறுகின்றன நேரடி வகுப்பு இல்லாத நாட்களில் ஆன் லைன் வகுப்பு தொடர்ந்து நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

முதுகலை முதலாமாண்டு இரண்டாமாண்டு மாணவ-மாணவிகளுக்கு வாரத்தில் ஆறு நாட்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெற உள்ளது இதேபோல் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரி உட்பட அனைத்து கல்லூரிகளிலும் முதலாமாண்டு மாணவ மாணவியருக்கு நேரடி வகுப்பு தொடங்கியது.

செய்தி க.சசிகுமார் நிருபர்.
https://thanjai.today/